என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களே !
(அங்க இங்க உருக்கமான வார்த்தைகள போட்டுக்கோங்க) இது மாதிரியும்,
இந்த வருடம் என்னுடைய பிறந்த நாளை, இலங்கையில் போர் முடிந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும்,இன்னும் நம் தொப்புள் கொடி உறவுகள் குடி மாற்றம் செய்ய படாத நிலையில் என் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன் (இப்படி அறிக்கை விட்டதால எவனாவது கொண்டாடாம விட்டானா, அவனுக்கு அடுத்த தேர்தல்ல சீட்டு கிடையாது) - இந்த மாதிரியும் பார்த்து இருக்கோம்!!!
இப்படி இருக்றவங்க மத்தியில நாளைக்கு என் பிறந்த நாளை கொண்டாடறதுல தப்பு இலைன்னு நினைக்றேன். கௌண்டமணி சொன்ன மாதிரி "இவங்க மட்டும் தான் இந்த உலகத்துல பிறந்தாங்கலா ? நாம தேவை இல்லாம பிறந்துடோமா " டயலாக் ஞாபகத்துக்கு வருது.
சரி கொண்டாடறதுன்னு முடிவு ஆச்சு.எப்படி செய்றது ?இதுல இன்னொரு பிரச்சனை வேற இருக்கு.எனக்கு இந்த publicity பிடிக்காது.(இது மாதிரி நான் எழுதறது உங்களுக்கு பிடிக்காது ,அதுவும் தெரியும்) இருந்தாலும் இதுலாம் பண்ண வேண்டி இருக்கு ,இந்த கணினி காலத்துல. அதுவும் இந்த appraisal அப்ப, self publicity useful'a இருக்கும் .PM ala எதுவும் திட்ட முடியலனா ,Communication skill,andha skill இப்படி nu story போகும்.
ஏதோ பேசுவானுங்க,"You gotta sell yourself" ,அப்படி இப்படி nu,ஒன்னும் புரிய மாட்டேன்கிது.(எனக்கு புரில,என்ன நானே விற்பதா!என்ன அர்த்தம் புரில,ஒரு வேல கெட்ட வார்த்தைல திட்ராரோ ).எவ்ளோ மண்டைய உடச்சி பாத்தாலும் நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காது ,வராது .சரி முடிஞ்சத செய்யலாம்னு யோசிச்சா?
யோசிக்றது - இது அத விட கொடும.யோசிச்சு பார்த்தா ரொம்ப sweat ஆகுது ("bloody indian climate").ஏன் இப்படி வேர்க்குது ,எல்லா மரத்தையும் வெட்டியாச்சு , அப்புறம் என்ன ஆகும் .
சின்ன வயசுல (உடனே ரொம்ப வயசாச்சுன்னு நினைக்காதிங்க, ஒரு சில வருடங்கள் முன்புனு வச்சிகோங்க),கோடை விடுமுறைல ஊருக்கு pack பண்ணி அனுபிடுவாங்க. 2 months - no cricket.எல்லாரையும் பிடிச்சு அடிக்கலாம்னு வெறுப்பு வரும்.வீட்ல என்ன கேட்டாலும் நடக்காது ,போய் தான் ஆகணும்.
இப்ப நெனச்சு பார்த்த அந்த 2 months வெயில் கொடுமை தெரியவே தெரியாது,வீட்டை சுற்றி மரங்கள்.இப்ப ஒரு மணி நேரம் A/C இல்லை na அவ்ளோதான்.
இப்படி யோசிக்கும் போதுதான், நிழல் பத்தி தெரிய வந்துது,(http://www.nizhaltn.org/) கேள்வி பட்டதுமே மகிழ்ச்சி .பேசி பாத்ததுல ஒரு நெகிழ்ச்சி.நல்ல காரியம் செய்றாங்க.நம்ம நாலா முடிஞ்சுது volunteer'a சேரலாம்.
நாளைக்கு இந்த அமைப்புக்கு subscribe பண்ணிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
வேற என்ன ,உங்களுக்கும் பிடிச்சா சேருங்க ,பிடிக்கலனாலும் சேருங்க....
ezhuthu nadai nantraga ullathu. ungalukku nagaichuvai_um varugirathu....Keep it up..Keep going and keep rocking...
ReplyDeleteKorvaiyaga illatha maathiri irukku... U can improve this....
-SV
நன்று. நகைசுவையோடு கடைசியா மெசெஜ் வேறா.
ReplyDelete